மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பதாகையை ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.