தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் தெய்வ இளைய ராஜன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சோ.க.கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் அனைத்து அலுவலகங்களிலும் ஆங்கில மொழியை மத்திய அரசு நீக்கிவிட்டது. இந்தி மொழியை அலுவல் மொழியாக கொண்டு வர வேண்டும் என்று ஒரு நிலையை எடுத்து உள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.