தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-10 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராசி.மதிவாணன், துணை செயலாளர்கள் சாரங்கபாணி, ராஜகுமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கலாநிதி வரவேற்று பேசினார்.

இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் டெல்லி சாமிநாதன் கலந்து கொண்டு பேசினார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்