ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2022-12-02 18:45 GMT

திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சலாவுதீன், மாவட்ட பொருளாளர் கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதல் சி.ஐ..டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் முதல் மருத்துவ செவிலியர்கள் வரையில் உள்ள பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வுக்கு பிறகு காலி பணியிடங்களை ஒப்பந்தமுறையில் நிரப்பும் முடிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்