அழகியமண்டபத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அழகியமண்டபத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-07-21 19:15 GMT

தக்கலை:

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் பெண்களை கொலை செய்த சம்பவங்களை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அழகியமண்டபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின் தலைமை தாங்கினார், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லா பாய், பொருளாளர் சாரதா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

--

Tags:    

மேலும் செய்திகள்