காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-27 13:14 GMT

வேதாரண்யம்:

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யத்தில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் நகர தலைவர அர்ச்சுணன். முன்னாள் நகர தலைவர் வைரம், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஆரோபால்ராஜ்,

மாவட்ட சிறுபான்மைப்பிரிவு துணைதலைவர் மெய்யாரபீக், மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் உசேன், வட்டார தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர துணை தலைவர் வெங்கட்ராஜ், நகர செயலாளர் செல்வகுமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

நாகை

இதேபோல நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் உதயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி செயலாளர் கோபிநாத் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டத்தை கண்டித்தும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ள இத்திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்