காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-20 17:43 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி நகரத்தலைவர் அர்சுணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் மெய்யாரபீக், நகர முன்னாள் தலைவர் வைரம், வட்டார தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர துணைத்தலைவர் வெங்கட்ராஜ், நகர செயலாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆப்கான் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்