காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
களக்காடு:
களக்காடு இந்திராகாந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தமிழ்செல்வன், மோகன் குமாரராஜா, மாவட்ட கவுன்சிலர் தனிதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.