காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-17 18:48 GMT

அரியலூர் மேல அக்ரஹாரம் தெருவில் உள்ள தபால் நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்குப்போட்டு அமலாக்கத்துறை விசாரணை செய்து வருவதாக கூறி, அதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்