துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் தூய்மை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், அதற்கு ஒத்துழைக்காததால் தூய்மை தொழிலாளர்கள் 2 பேரை அன்றாட பணிக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் கூறி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பணி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ள 2 தொழிலாளர்களுக்கும் பணி வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.