சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-05 17:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஓரகடம் சிப்காட் பகுதியில் ஜப்பான் நிறுவனத்தின் யுனிபிரஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு ஆலை முன்பாக சங்கத்தின் கொடி மற்றும் பெயர் பலகை திறக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகம் சிப்காட் அதிகாரிகள் மூலமாக ெபாக்லைன் எந்திரத்தை கொண்டு கொடி மற்றும் பெயர் பலகையை அகற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு மீண்டும் அதே இடத்தில் சங்கத்தின் கொடி மற்றும் பெயர்பலகையை அமைத்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தொழிலாளர்களை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு, குறைவான ஊதியத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை நியாயப்படுத்தும் வகையிலும், சி.ஐ.டியூ. தொழிற்சங்கத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் இத்தகைய தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க விரோதப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர்கள் ஸ்ரீதர், தேவமணி, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்