மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-13 19:41 GMT

கரூர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கரூர் மாவட்ட குழு சார்பில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். வாரிய உயர்வு எண்-2ஐ ரத்து செய்ய வேண்டும். கரூர் மின் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பணப்பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும். களப்பணியாளர்களுக்கு சீருடைகள், ரெயின் கோட், டார்ச் லைட், கையுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும். கரூர் மின் வட்டத்தில் மின்மாற்றிகள் பாதுகாத்திட மின்மாற்றி ஆயில், மரம் வெட்டும் எந்திரம், அனைத்து பிரிவுக்கும் வழங்க வேண்டும். கரூர் மின் வட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கட்டிடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்