ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காலி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-10-14 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850, 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் புஷ்பவள்ளி தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ராசையா, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் பால்சாமி, சங்க தலைவர் குருசாமி, பட்டு வளர்ச்சி துறை மாநில தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது காலி தட்டு ஏந்தி சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பொருளாளர் தங்கப்பாண்டியன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்