விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்திற்கு பலியானோர் சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் பா.ஜ.க.சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.