பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் ரெயில் நிலையம் எதிரில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பட்டியல் அணி துணைத் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்அரசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், படுகொலை செய்யப்பட்ட பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் படுகொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.