பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
விழுப்புரம்:
தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வடிவேல் பழனி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் தங்ககணேசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் சிவதியாகராஜன், சுகுமார், ராமஜெயக்குமார், திருநாவுக்கரசு, சதாசிவம், ஜெகதீஷ், பாலசுப்பிரமணியன், பாபு, சீனிவாசன், சிவராஜ், தாஸசத்யன் உள்பட பலர் கலந்துகொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.