பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் மேகதாதுவில் அணை கட்ட காங்கிரஸ் கட்சி முயற்சிக்கும் நிலையில் பெங்களூருவில் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டிக்கும் விதமாக 'கோ பேக்' ஸ்டாலின் என்ற தலைப்பில் பா.ஜ.க.வினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாநில தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடகாவில் மேகதாது குறுக்கே அணை கட்டுவதன் மூலம் தமிழக மக்களின் குடிநீர் தேவையை வஞ்சிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது.
இதனை பொருட்படுத்தாமல் தமிழக முதல்-அமைச்சர் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி அமைக்க சென்றுள்ளார் என்றார்.