கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-26 18:45 GMT

கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 6-வது ஊதிய குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை 1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் அருண்குமார் வரவேற்றார். மகளிர் அணி செயலாளர் களஞ்சிய குமாரி, சங்கரன்கோவில் கோட்ட செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள். சங்கரன்கோவில் பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில தணிக்கையாளர் சுப்புராஜ் உட்பட பலர் பேசினார்கள். கோட்ட செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்