அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-10-12 18:45 GMT

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அ.ம.மு.க.வினர் நேற்று கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் சேகர், லிங்கேஸ்வரன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு மகளிருக்கு ரூ.1000, நீட் தேர்வு ரத்து, மதுவிலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்