மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-03 11:47 GMT

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருவண்ணாமலையில் ஊர்வலம் நடைபெற்றது

. ஊர்வலம் திருவண்ணாமலை வேங்கிக்கால் இ.பி. அலுவலக பஸ் நிறுத்தம் அருகில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. மாவட்ட தலைவர் சம்பத்ராவ் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் சாமியார், துணைத்தலைவர்கள் வேல்முருகன், துரை, இணை செயலாளர்கள் சாந்தி, அண்ணாமலை, போராட்ட குழு தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தின் நிறைவாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் பயிர் கடன், நகைக் கடன் மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடிக்குரிய தொகையினை வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட வேண்டும். கடன் தள்ளுபடியில் விதிமீறல், நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களின் ஓய்வுக்கால நிதிப் பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதை உடனே விடுவிக்கப்பட வேண்டும்.

பல்நோக்கு மற்றும் வேளாண்மை உட்கட்டமை திட்டத்தில் தேவையற்ற உபகரணங்களை வாங்க கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 24-ந் தேதி சென்னையில் ஊர்வலம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்