காஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-09-17 11:30 GMT

மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் காவலான் கேட்டில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட அதி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்து மின்கட்டண உயர்வை கண்டித்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, வாலாஜாபாத் நகர செயலாளர் வாலாஜாபாத் மார்க்கெட் வி.அரிக்குமார், மாங்காடு நகர அ.தி.மு.க. செயலாளர் மாங்காடு பிரேம்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி முடித்ததும் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் தண்ணீர் கொடுத்து உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்