மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-19 19:35 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

சென்னையில் போராட்டம் நடத்திய அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். வரதராஜன், நகர செயலாளர் முகமது நைனார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்ச ராஜா, ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரியாபட்டி

திருச்சுழி வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, முத்துராமலிங்கம் மற்றும் நகர செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் திருச்சுழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் குருசாமி, சிறுபான்மையினர் பிரிவு துணைத்தலைவர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காரியாபட்டியில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ் தலைமையில் காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர்முருகன், பொதுக்குழு உறுப்பினர் பழனி, நகர செயலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி கவுன்சிலர் ராமதாஸ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் ரமேஷ், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குண்டு குமார், மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரபிரபா முத்தையா, ஒன்றிய செயலாளர் மயில்சாமி, இளைஞர் பாசறைச் செயலாளர் முத்துராஜ், வர்த்தக அணி செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், பெருமாள் பிச்சை உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்