ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கூறியும், அவரை கண்டித்தும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலி வருணன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கரு. வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.