செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-06 18:45 GMT

செங்கோட்டை:

புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பூர்வீக தமிழர் விடுதலைக்கட்சி மாநில தலைவர் இசைவாணன் தலைமை தாங்கினார். மாநில நிதிச்செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் சிறப்புரையாற்றினார். இதில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலிவர்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்