கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-27 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர், தலைவர் தமிழரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் புதிய கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பாக, கட்டுமானம் குறித்த வரைபடம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். ஏற்கெனவே கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மீண்டும் கடைகள் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலயுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை, சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அருள் தாஸ் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்