பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-22 18:30 GMT

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசு பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ராசி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடா்பாக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்