கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-14 18:41 GMT

ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் தர்மா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு தூக்கு கயிறு மாட்டியும், மாலை அணிவித்தும் கோஷமிடப்பட்டது. இதில் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்பு என்பதை கைவிட வேண்டும், திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணி முழுவதையும் தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட வேண்டும், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்