தேர்வு கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேர்வு கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சூரியா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் தேர்வு கட்டண உயர்வு குறித்து கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி மற்றும் இந்திய மணவர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.