மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-25 17:41 GMT

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், கோவி.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆாப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மின்கட்டண உயர்வு மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்ததை கண்டித்தும், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் ஜி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் டாக்டர் லீலா சுப்பிரமணியம், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்ரமணியம், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி. சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.நாகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் ஒன்றிய செயலாளர் டாக்டர் என.திருப்பதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்