வேலூரில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க அனைவரையும் அனுமதிக்கக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-27 16:14 GMT

வேலூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க அனைவரையும் அனுமதிக்கக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாநகர், புறநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் புருஷோத்தமன், புறநகர் மாவட்ட செயலாளர் பிரதாப் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் சுரேஷ், அவைத்தலைவர் பாலமுருகன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நெசவாளர் அணி துணைச்செயலாளர் ஏகாம்பரம், மாணவரணி துணை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், மின்கட்டண உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு கோதுமை, அரிசி, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்த்தியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் தே.மு.தி.க.வினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டுமே சென்று கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறினர். அதனை ஏற்க மறுத்த தே.மு.தி.க.வினர் அனைவரையும் உள்ளே அனுமதிக்கும்படி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்