பத்திரப்பதிவு அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் பத்திரப்பதிவு அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-06-26 17:34 GMT

திருப்பத்தூர் நகர பா.ஜ.க. சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் வி.அன்பழகன் தலைமை தாங்கினார்.

நகரத்தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில எஸ்.டி. அணி துணைத்தலைவர் சி.பண்பு தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் சார் பதிவாளராக பணியாற்றி வரும் நித்தியானந்தம், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் இருந்து பணம் கேட்கிறார்.

எனவே, உடனடியாக அனைத்து பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தை கண்காணித்து லஞ்சம் வாங்குபவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் மாவட்ட பிரசார இயக்க தலைவர் டி.சி.அருள்மொழி, நீலமேகம் உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் கந்தலி ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்