காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் பிரபாகரன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், வட்டார தலைவர்கள் சோனைமுத்து, மதியழகன், கணேசன், வேலாயுதம், வீரமணி, ராஜாராம், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மகாலிங்கம், முன்னாள் நகர் தலைவர் இக்பால், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் மற்றும் சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.