நாங்குநேரி மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாங்குநேரி மாணவர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-21 20:08 GMT

நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது சகோதரி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் அய்யப்பன், பொது செயலாளர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மாணவர் மற்றும் அவரது சகோதரி மீதான தாக்குதலை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்