ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-05 19:49 GMT

சென்னையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அவர்களை தமிழக முதல்-அமைச்சர் அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், திருச்சி உறையூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநகர தலைவர் ஹக்கீம் அலி, மாநகர செயலாளர் பெர்ஜித் ராஜன், தமிழக ஆசிரியர் கூட்டணி நகரத் தலைவர் ஜீவானந்தம் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்