ஓசூரில் முன்னாள் எம்.எல்.ஏ. சிலை வைக்க கோரிஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர்
ஓசூர் டவுன் பஞ்சாயத்து போர்டு தலைவராக 31 ஆண்டுகள் பணியாற்றியும், எம்.எல்.ஏ. ஆகவும் பணியாற்றி மறைந்தவர் கே.அப்பாவு பிள்ளை. ஓசூர் பழைய நகராட்சியில் இருந்த அவரது சிலை, வணிக வளாகம் அமைப்பதற்காக அகற்றப்பட்டது. இந்த சிலையை, ஓசூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். வட்ட தலைவர் ராஜாமணி வரவேற்றார். இதில், மண்டல தலைவர் சீனிவாசலு, குணசேகரன், ராமமூர்த்தி, சத்தியநாராயணன், ரவிச்சந்திரன், சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.