ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-01 19:45 GMT

ஓசூர்

ஓசூரில் பா.ஜனதா நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பதை கண்டித்தும், வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமைதாங்கினார்.

மேலும், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் அன்பரசன், விஜயகுமார், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்கள் பிரவீண்குமார், ராஜசேகர், மாநில தொழில்துறை பிரிவு செயலாளர் கே.ராமலிங்கம், மாநில வர்த்தக பிரிவு துணை செயலாளர் சுதா நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சியினர், இந்து அமைப்பின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்