பொம்மிடி ரெயில் நிலையம் முன்புதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-06-30 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ெரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் தீர்த்தகிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோலை அர்ஜூனன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், வன விலங்குகள் வனத்தில் இருந்து விவசாய நிலத்துக்கு வருவதை தடுக்க மின் வேலி, கம்பி வேலி, அகழிகள் அமைக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டண முறைகேடு

பொம்மிடி காய்கறி விற்பனை நிலைய கட்டண முறைகேடுகளை பேரூராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட பொருளாளர் வஞ்சி மாவட்ட துணைத்தலைவர் மல்லையன், மகளிர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணகி, மாவட்ட தலைவர் அம்புரோஸ், வட்ட பொருளாளர் பொன்னுசாமி மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் தனுஷன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்