பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-06-24 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகி கலாவதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாலக்கோடு பஸ் நிலைய தரைத்தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பாலக்கோடு காந்தி மைதானம் முதல் கல்கூடப்பட்டி புதிய மேம்பாலம் வரை தார்சாலையை உடனே சீரமைக்க வேண்டும். பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்