பாலக்கோடு:
பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் வேலு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 18 வார்டுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் பணியை உடனே நிறைவேற்ற வேண்டும். பஸ் நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வாரவேண்டும். பெல்ரம்பட்டி-கல்கூடப்பட்டி சாலையை சீர் செய்ய வேண்டும். சனத்குமார் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.