சேலம்
சேலம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் வெற்றிவேல், வடக்கு மாநகர செயலாளர் குருபிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.