சோழசிராமணியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சோழசிராமணியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Update: 2023-06-16 18:45 GMT

பரமத்திவேலூர்

ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியில் இளம்பெண் கடந்த மார்ச் 11-ந்் தேதி பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்ய வலியுறுத்தியும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக தமிழக அரசு இந்த கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றியது. இந்த நிலையில் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள அப்பாவி விவசாயிகளை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று செய்யாத குற்றத்தை நிர்பந்தப்படுத்தி ஏற்றுக்கொள்ள செய்து பொய் வழக்கு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் மனித உரிமை மீறல் நடவடிக்கையும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஜேடர்பாளையம் போலீசார் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கணேசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர், மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்