தர்மபுரி:
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மல்லையன் தலைமை தாங்கினார். விவசாயிகள் மகாசபா மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் முத்துகுமார், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி, மாவட்ட செயலாளர் ஜீவா, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரவி, நக்கீரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக எம்.பி.பிரிஜ் பூஷன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நீதிகேட்டு போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.