ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2023-05-31 18:45 GMT

சிவகங்கை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிமுறைகளுக்கு முரணாக வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். மாறுதல் கலந்தாய்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட திட்ட அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமரேசன், ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் கண்ணதாசன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாவட்ட தலைவர் நரசிம்மன், மாவட்ட துணை நிர்வாகிகள் ஜான் அந்தோணி, ரவி, கல்வி மாவட்ட நிர்வாகிகள் சிங்கராயர், சகாயதைனேஸ், பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்