ஆர்ப்பாட்டம்
பறையர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பறையர் விடுதலை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வைரவன் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜபாளையம் யூனியன் மேலப்பாட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்தில் உள்ள இந்திரா நகர், ஜெ.ஜெ.நகர், சக்தி நகர், அம்பேத்கர் நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் அடிப்படை வசதி செய்துதரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இ்ந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு பறையர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.