ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கடையநல்லூர்:
தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்வதை எளிமைப்படுத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் கோமதி சங்கர் தலைமை தாங்கினார். இந்து முன்னணி நகரப் பார்வையாளர் சிவா, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் சக்திவேலன், மாநில செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் குருசாமி, நகர செயலாளர் காளிராஜ், பொருளாளர் வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.