அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-15 17:13 GMT

தர்மபுரி

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதுராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் உள்ள ஓட்டுனர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்