சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-05-11 18:45 GMT

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கி வாழும் ஏழை எளிய மக்களின் 300 கோடி பணத்தை மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து, தமிழ்நாடு அரசு தலையிட்டு மோசடி செய்த குற்றவாளிகள் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தியும், மோசடியில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட தலைவர் வின்சென்ட் தலைமை தாங்கினார். சிவகங்கை மண்டல துணை பொது செயலாளர் சாமுவேல் பாண்டித்துரை முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரிசில்லா பாரதி, சிவகங்கை மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் சட்ட ஆலோசகர் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராசையா, ராமநாதபுரம் வைகை பாசன மாவட்ட செயலாளர் மலைச்சாமி, ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் இருதயராஜ், ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் எபினேசர், திருவாடானை தொகுதி மாவட்ட செயலாளர் விவேகானந்தம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி நகர் செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்