கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மோகனூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-25 18:41 GMT

மோகனூர்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர், கிராம நிர்வாக அலுவலகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மோகனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும், காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்தும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கி சட்டம் இயற்றிடவும், படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மோகனூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் நல்லசிவம், பொருளாளர் இளையராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்