ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பாக நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எம்.பழனியப்பன், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒய்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் மூத்த வழக்கறிஞர் ராம் பிரபாகர், மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார் மற்றும் வீரபாண்டி, ஷரீப், சஞ்சய் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.