டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் தொழிலாளர்களின் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கோபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகங்கை நகர செயலாளர் மருது, ஏ.டி.சி. மாவட்ட செயலர் ராஜா, மாவட்டத் தலைவர் காளை லிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் கங்கை சேகரன், முத்துக்குமார் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் மண்டல மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.